உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 106 சமையல் உதவியாளர் பணி 853 பேர் விண்ணப்பம்

106 சமையல் உதவியாளர் பணி 853 பேர் விண்ணப்பம்

தேனி: மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஏப்.,ல் அறிவிப்பு வெளியானது. ஏப்., 15 முதல் 26 வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி, 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்ப தாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்க கூறியிருந்தனர். இப்பணிக்கு 853 விண்ணப்பங்கள் வந்துள்ளன.பணியாளர்களை தேர்வு செய்ய மே 31, ஜூன் 3,5 தேதிகளில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேர்முகத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ