மேலும் செய்திகள்
டாக்டர் வீட்டில் நகை கொள்ளை
19-Nov-2024
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவப்பட்டியில் பூட்டிய வீட்டை திறந்து பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மறவப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமாரசெல்வம் 32, நேற்று முன் தினம் விவசாய பயன்பாட்டிற்கான தன் டிராக்டரை சர்வீஸ் செய்ய ஆண்டிபட்டி சென்றார். அவரது மனைவி தோட்டத்திற்கு சென்று விட்டார்.குமாரசெல்வத்தின் மாமியார் வீட்டின் கீழ்தள பகுதியை பூட்டிவிட்டு மாடியில் துணிகளை காய வைக்கும் பணியில் இருந்தார். கீழ்தளத்தில் சத்தம் கேட்ட குமாரசெல்வத்தின் மாமியார் இறங்கி வந்த போது அடையாளம் தெரியாத நபர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். வீட்டின் வெளி கதவு திறந்திருந்தது.பீரோவும் திறந்து கிடந்தது. குமாரசெல்வம் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.குமாரசெல்வம் புகாரின்படி இன்ஸ்பெக்டர் சரவணகுமார், எஸ்.ஐ.,ராஜசேகர் மற்றும் போலீசார் தடயங்களை சேகரித்து திருடர்களை தேடி வருகின்றனர்.
19-Nov-2024