உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சோலார் மின் திட்டத்தில் இணைய 15 பேர் மனு

சோலார் மின் திட்டத்தில் இணைய 15 பேர் மனு

பெரியகுளம்: பெரியகுளத்தில் சோலார் மின்திட்டத்தில் இணைவதற்கு 15 நுகர்வோர் விண்ணப்பித்துள்ளனர். பெரியகுளம் வடகரை தனியார் மண்டபத்தில் சோலார் மின்திட்டத்தில் நுகர்வோர்களை இணைப்பதற்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. செயற்பொறியாளர் பாலபூமி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் பார்த்தசாரதி, முத்துராமலிங்கம், முருகன்,முருகேசன் உதவி பொறியாளர்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் பங்கேற்றனர். செயற்பொறியாளர் கூறுகையில்: பிரதமரின் சோலார் மின் திட்டத்தில் இணைந்து மின் கட்டண செலவை குறைத்தும், கூடுதல் மின்சாரத்தை வாரியத்திற்கு வழங்கி பயன் பெறலாம். ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட்டுக்கு ரூ.78 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது என்றார். மின்துறையினர் நுகர்வோர்கள் சந்தேகங் களுக்கு விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து 15 பேர் சோலார் மின் திட்டத்தில் இணைய விண்ணப்பித்தனர். 50 க்கும் அதிகமானோர் இணைவதற்கு விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ