மேலும் செய்திகள்
ஜமாபந்தி இன்று துவக்கம்
21-May-2025
தேனி : மாவட்டத்தில் நடந்து வரும் ஜமாபந்தியில் இதுவரை 1766 மனுக்களை பொதுமக்கள் வழங்கி உள்ளனர்.மாவட்டத்தில் மே 22 முதல் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடந்து வருகிறது.பெரியகுளத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், உத்தமபாளையத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, ஆண்டிபட்டியில் பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், தேனியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி, போடியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது தலைமை வகிக்கின்றனர்.மூன்று நாட்கள் நடந்துள்ள ஜமாபந்தியில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, மின் இணைப்பு,புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1766 மனுக்களை பொதுமக்கள் வழங்கி உள்ளனர். இதில் பெரியகுளத்தில் 50,தேனியில் 20, உத்தமபாளையத்தில் 10, போடியில் 15 பட்டாமாறுதல், உட்பிரிவு உள்ள மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெரியகுளத்தில் 20 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ன.
21-May-2025