உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 199 மதுபாட்டில்கள் பறிமுதல்

199 மதுபாட்டில்கள் பறிமுதல்

தேனி; தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேனி எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்லும் ரோட்டில் தனியார் லாட்ஜ் அருகே நின்றிருந்த கோவை மாவட்டம் பீளமேடு புதுார் விக்னேஷ்வரன் 29, தேனி அல்லிநகரம் பகவதியம்மன் கோயில் தெரு சிவராமன் 54, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அனுமதி இன்றி மது விற்றது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 199 மதுபாட்டில்கள், பணம் ரூ.3760யை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ