வாழைத்தார்கள் திருடிய 2 பேர் கைது
கூடலுார்: லோயர்கேம்பில் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த முகேந்திரகண்ணன் என்பவரது வாழைத் தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார்கள் திருடு போவதாக போலீசில் புகார் தெரிவித்திருந்தார். நேற்று ஆட்டோவில் வாழைத்தார்கள் திருடிச் சென்ற கம்பத்தைச் சேர்ந்த சிவனேசன் 27, கார்த்தி 24, ஆகியோரை கைது செய்து ஆட்டோ மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 70 வாழைத்தார்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சத்யா, கம்பத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே இரண்டு முறை வாழைத்தார்களை திருடி சென்றதும், தற்போது மூன்றாவது முறையாக திருடிச் சென்றபோது பிடிபட்டதும் தெரிய வந்தது.