மேலும் செய்திகள்
சின்னமனுாரில் வேன் திருட்டு
22-Aug-2025
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே கோம்பை அரசு குவாரியில் குத்தகை காலம் முடிந்த கற்களை கடத்திய இரண்டு டிப்பர் லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். கோம்பை கல்குவாரியில் அரசின் குத்தகை காலம் முடிந்த பின் உடைகற்களை வருவாய்த் துறையினர் குவித்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் அங்கு வைத்திருந்த கற்களை லாரிகளில் ஏற்றி கடத்தி செல்ல முயற்சிப்பதாக உத்தமபாளையம் ஆர்.டி.ஒ செய்யது முகமதுவிற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவில் தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் கார்த்திக் தலைமையிலான வருவாய்த் துறையினர் குவாரிக்கு சென்றனர். அங்கு வருவாய்த்துறையினர் வைத்திருந்த கற்களை இரண்டு டிப்பர் லாரிகளில் சிலர் ஏற்றி கொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் கல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். அங்கிருந்த லாரிகளை போலீசில் ஒப்படைத்தனர். கோம்பை எஸ்.ஐ. பாண்டிச்செல்வி நடத்திய விசாரணையில் கேரளாவை சேர்த்த சனேன் ஜோசப் மற்றும் நெடுங்கண்டத்தை சேர்ந்த மகேஷ் ஆகியோரின் லாரிகள் என தெரிந்தது. அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
22-Aug-2025