உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 205.2 மி.மீ., மழைப்பொழிவு இருநாட்களில் 11 வீடுகள் சேதம்

205.2 மி.மீ., மழைப்பொழிவு இருநாட்களில் 11 வீடுகள் சேதம்

தேனி,: மாவட்டத்தில் நேற்று முன்தினம் 205.2 மி.மீ., மழை பதிவானது. இரு நாட்களில் 11 வீடுகள் சேதமடைந்தது.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஆண்டிபட்டி, 19 மி.மீ., அரண்மனைப்புதுார் 12.6 மி.மீ., வீரபாண்டி 4.4 மி.மீ., பெரியகுளம் 26.2 மி.மீ., மஞ்சளாறு 41 மி.மீ., சோத்துப்பாறை 5 மி.மீ., வைகை அணை 20.4 மி.மீ., போடி 13.6 மி.மீ., உத்தமபாளையம் 2.6 மி.மீ., கூடலுார் 5.4 மி.மீ., பெரியாறு அணை 19 மி.மீ., தேக்கடி 32 மி.மீ., சண்முகநதி அணை 4 மி.மீ., என 205.2 மி.மீ., மழை பதிவானது.கடந்த இருநாட்களில் 3 வீடுகள் முழுசேதம் அடைந்தது. 8 வீடுகள் பகுதி தேசம் என மொத்தம் 11 வீடுகள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மழை பாதிப்புகள் என்றால் 1077 அல்லது 04546 250101 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ