உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தெருநாய்கள் கடித்ததில் 25 ஆட்டுக்குட்டிகள் பலி

தெருநாய்கள் கடித்ததில் 25 ஆட்டுக்குட்டிகள் பலி

கடமலைக்குண்டு : கண்டமனூர் அருகே ராமநாதபுரம் மாவட்டம், குமிழங்குளத்தைச் சேர்ந்த மூர்த்தி 37, செம்மறி ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இரு வாரங்களாக கண்டமனூர் அருகே கோவிந்தநகரத்தில் உள்ள பாண்டியராஜன் என்பவரின் தோட்டத்தில் கிடை அமைத்து ஆடுகளை பாதுகாத்து வருகிறார். கிடையில் 250 செம்மறி ஆடுகள் மற்றும் பிறந்து இரு வாரங்களான குட்டிகள் இருந்தன. நேற்று முன் தினம் காலை மூர்த்தி செம்மறி குட்டிகளை ஓலையால் வேயப்பட்ட பெரிய கூடையில் வைத்து மூடிவிட்டு மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். ஆட்கள் இல்லாத வேளையில் தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் கூட்டம் மூடி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறியது. மாலையில் மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது குட்டிகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த மூர்த்தி ஆட்டுக்குட்டிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனால் அடுத்தடுத்து 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகி விட்டன. இது குறித்து மூர்த்தி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி