உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் திருட்டு

வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் திருட்டு

பெரியகுளம் : பெரியகுளத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.13 லட்சம் மதிப்பிலான 27 பவுன் தங்க நகைகள் திருடு போனது. போலீசார் விசாரிக்கின்றனர்.பெரியகுளம் தென்கரை காளஹஸ்தீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி லலிதா 64. மகள் பாலவர்ஷினியுடன் வசித்து வருகிறார். 2024 ஜன., வீட்டு வேலைக்காக கெங்கம்மாளும், பிப்., ல் கெங்கம்மாள் அக்கா மகள் ரம்யாகிருஷ்ணா வேலைக்கு சேர்ந்தனர். லலிதா வீட்டின் லாக்கரில் இருந்து 2 பவுன் தங்க செயின், யானை, கிளி மாடல் தங்க டாலர், விநாயகர், லட்சுமி, வெங்கடாசலபதி படங்கள் பதித்த தங்க டாலர்கள் உட்பட 42 வகையான ரூ.13 லட்சம் மதிப்பிலான 27 பவுன் தங்க நகைகள் திருடுபோனது. நகைகள் கொஞ்சம், கொஞ்சமாக திருடப்பட்டுள்ளது. தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், வீட்டில் வேலை செய்த கெங்கம்மாள், ரம்யா கிருஷ்ணாவிடம் விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி