உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லோக் அதாலத் மூலம் 2773 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் மூலம் 2773 வழக்குகளுக்கு தீர்வு

தேனி : மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடந்தது. இதில் 2773 வழக்குகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.தேனி முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தலைமை வகித்து லோக் அதாலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். அமர்வு நீதிபதி கணேசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணக்குமார், சார்பு நீதிபதி கீதா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜ், நீதித்துறை நடுவர்கள் ஜெயமணி, ஆசைமருது, ஜெயபாரதி பங்கேற்றனர்.பெரியகுளத்தில் சார்பு நீதிபதி சந்திரசேகர், மாவட்ட உரிமையியல் நீதி மன்ற நீதிபதி ரகுநாத், நீதித்துறை நடுவர்கள் கமலநாதன் பங்கேற்றனர். உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜசேகர், நீதித்துறை நடுவர்கள் காமராசு, அமலானந்தகமலகண்ணன் பங்கேற்றனர்.ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தன், நீதித்துறை நடுவர் பாசில்முகமது பங்கேற்றனர். போடியில் சார்பு நீதிபதி சையது சுலைமான் உசேன், மாவட்ட உரிமையியல் நீதிபதி முகமது ஹாசிம், நீதித்துறை நடுவர் நல்லகண்ணன் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த லோக்அதாலத்தில் 2773 வழக்குகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை