ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 2 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
தேவாரம்: ஆந்திராவில் இருந்து தேவாரத்திற்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா வுடன் போலீசார் மூவரை கைது செய்தனர். தேவாரம் ஐயப்பன் கோயில் தெரு சுரேஷ் 36. இவர் சில்லறையில் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து 2 கிலோ கஞ்சாவை வாங்கி வந்துள்ளார். வாங்கிய கஞ்சாவை தேவாரம் கண்ணன் கோயில் தெருவை சேர்ந்த முருகன் 57. அழகர்நாயக்கன்பட்டி தனசேகரன் 47,ஆகியோருடன் சேர்ந்து கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக மாற்றினர். பின் விற்பனை செய்ய தேவாரம் மேட்டுப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று இருந்தனர். ரோந்து சென்ற போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்த போது டூவீலரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தேவாரம் போலீசார் சுரேஷ், முருகன், தனசேகரன் மூவரையும் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.