பெண்களிடம் பலாத்கார முயற்சி3 ஆட்டோ டிரைவர்கள் கைது
தேனி : வீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் ஆண் நண்பருடன் இருந்த 2 இளம்பெண்களை பலாத்காரம் செய்ய முயற்சித்த வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெரு விக்னேஷ் 27, குணால் 25, அம்மன் நகர் ஹரிஹரன் 21, ஆகிய மூன்று ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். தேனியில் உள்ள சலுானில் வெளி மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் ஊழியர்களாக பணிபுரிகின்றனர். அந்த இரு பெண்களும் தங்களது ஆண் நண்பருடன், நேற்று முன்தினம் இரவு 10:15 மணியளவில் வீரபாண்டி தடுப்பணை அருகே அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு சென்ற கைதானஆட்டோ டிரைவர்கள், இளம்பெண்களுடனும், ஆண் நண்பருடரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் 29 வயது பெண்ணை பலாத்காரம் செய்யமுயற்சித்து, இழுத்து சென்றுள்ளனர். அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். தகவல் அறிந்து எஸ்.பி., சினேஹா பிரியா உத்தரவில் 2 தனிப்படை போலீசார் விக்னேஷ், குணால், ஹரிஹரன் உள்ளிட்ட மூன்று ஆட்டோ டிரைவர்களை கைது செய்தனர்.