உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடமலைக்குண்டு இரட்டை கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது

கடமலைக்குண்டு இரட்டை கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கடமலைக்குண்டு அருகே வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் பிப்ரவரி 26 ல் உடலில் பலத்த காயங்களுடன் இருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 45, வருஷநாடு வைகை நகரை சேர்ந்த கருப்பையா 55, என்பது தெரிந்தது. இறந்த கருப்பையா மகன் சந்திரசேகரன் தனது தந்தை இறப்பில் மர்மம் இருப்பதாக தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரில் தனது தந்தை பிப்ரவரி 25 கோவில்பாறை தோட்டத்திற்கு சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. அவரைத் தேடி சென்று பார்த்தபோது உடலில் வெட்டு காயங்களுடன் மணிகண்டன், கருப்பையா இறந்து கிடந்ததாக தெரிவித்தார். அப்பகுதியில் கிடந்த மொபைல் போன் கைப்பற்றப்பட்டது.ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். கொலை வழக்கில் கடமலைக்குண்டு மேலப்பட்டியைச் சேர்ந்த கணேசன் 32, மார்ச் 3ல் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணைக்குப் பின், கொலையில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த கண்டமனூர் அண்ணா நகர் கண்ணன் 30, குமணன்தொழு அருகே சிதம்பர விலக்கை சேர்ந்த மாதவன் என்ற மனோஜ்குமார் 25, கடமலைக்குண்டு அருகே பாலூத்தைச் சேர்ந்த சுரேந்திரன் 25, ஆகிய 3 பேரை கைது செய்து, தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !