உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணை தாக்கிய 3 பேர் கைது

பெண்ணை தாக்கிய 3 பேர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைச்சாமி மனைவி பழனியம்மாள் 50. அதே பகுதியைச் சேர்ந்த கபிபெருமாள் 23.இவரது நண்பர்கள் மனோஜ்குமார் 23. வினோத்குமார் 23. ஆகியோர் அந்தப்பகுதியில் பொது மேடையில் பட்டாசு வெடித்தனர். அருகே கோயில் கட்டுமானப்பணிக்கு தென்னங்கிடுகு போடப்பட்டிருந்தது. பட்டாசு தீ தென்னங் கிடுகில்பட்டால் விபத்து ஏற்படும்.எனவே வேறு இடத்தில் பட்டாசு வெடியுங்கள் என பழனியம்மாள் அறிவுறுத்தியுள்ளார்.இதனால் கோபமடைந்த மூன்று பேரும் பழனியம்மாளை அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். வடகரை எஸ்.ஐ., விக்னேஷ், கபிபெருமாள் உட்பட மூவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ