உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் 9 ஆண்டுகளில் 3070 கொலைகள்: உள்துறை தகவல்

கேரளாவில் 9 ஆண்டுகளில் 3070 கொலைகள்: உள்துறை தகவல்

மூணாறு: கேரளாவில் கடந்த 9 ஆண்டுகளில் 3070 கொலைகள் நடந்துள்ளதாக உள்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.கேரளாவில் சமீப காலமாக கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளன.ரவுடிகள், கூலிப்படையினர், போதை ஆசாமிகள் ஆகியோரால் கொலைகள் நடந்த போதும் தனிப்பட்ட முறையில் அதிக கொலைகள் நடந்துள்ளன.2016 மே முதல் 2025 மார்ச் 16 வரை மாநிலத்தில் 3070 கொலைகள் நடந்ததாக உள்துறையினரின் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. ரவுடிகள் மோதல் தொடர்பாக 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போதை தொடர்பான பிரச்னைகளில் 52 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் ஊரக பகுதிகளில் மிகவும் கூடுதலாக 287 கொலைகள் நடந்துள்ளன. கொலைகள் தொடர்பாக 476 பேர் தண்டனை பெற்றுள்ளனர். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய 78 பேர் தலைமறைவாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை