உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொகுதியில் 353 ஓட்டுச்சாவடி மையங்கள் பதட்டமானவை

தொகுதியில் 353 ஓட்டுச்சாவடி மையங்கள் பதட்டமானவை

தேனி : தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான்(தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் 1788 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில் பதட்டமான ஓட்டுச்சாவடி மையங்களை கண்டறியும் பணியில் போலீசார், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் 253 இடங்களில் உள்ள 353 ஓட்டுச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின் போது கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் உசிலம்பட்டி சட்டசபை தொகுதியில் மட்டும் 70 மையங்கள் பதட்டமானது என கண்டறியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ