உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடையில் திருடிய 4 பேர் கைது

கடையில் திருடிய 4 பேர் கைது

போடி: போடி தேவாரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் சின்னமுத்து 35. இவர் கிருஷ்ணா நகர் எதிரே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜா 50. போடி நகராட்சி காலனியை சேர்ந்தவர்கள் வடிவேல் 24., மணிகண்டன் 32., சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் 32. இவர்கள் 4 பேரும் சேர்ந்து இரும்பு கடையை உடைத்து உள்ளனர். கடையின் உள்ளே இருந்தரூ.8500 மதிப்பு உள்ள 7 கிலோ காப்பர் வயர், குத்துவிளக்கு, கிரைண்டர் மோட்டாரையும் திருடி உள்ளனர்.இவர்களை பிடித்து போலீசாரிடம் சின்னமுத்து ஒப்படைத்துள்ளார். போடி தாலுாகா போலீசார் ஜோதிராஜா, வடிவேல் உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை