கஞ்சா வியாபாரி உறவினர்கள் தாக்குதல் 4 போலீசார் காயம்
மூணாறு: மூணாறு அருகே கஞ்சா வழக்கில் தொடர்புடையவரை கைது செய்ய சென்ற போது தாக்கியதில் ௪போலீசார் காயம் அடைந்தனர். மூணாறு சைலன்ட்வாலி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் சரத் 35. இவர் கஞ்சா மொத்த விற்பனையாளர் என டி.எஸ்.பி., அலெக்ஸ்பேபி தலைமையிலான போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் சரத்தை கைது செய்ய நேற்று முன் தினம் மாலை சைலன்ட்வாலி எஸ்டேட்டிற்கு சென்றனர். அப்பகுதியில் வசிக்கும் சிலர், சரத்தின் உறவினர்கள் இணைந்து, அவரை கைது செய்ய விடாமல் தடுத்து, போலீசாரை தாக்கினர். நான்கு போலீசார் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சரத்தின் தந்தை அந்தோணி, தாயார் லீலாமேரி, மனைவி உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய சரத்தை தேடி வருகின்றனர்.