உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மீன் வளர்ப்பு தொழிலுக்கு 40 சதவீத மானியம்

மீன் வளர்ப்பு தொழிலுக்கு 40 சதவீத மானியம்

ஆண்டிபட்டி : மீன்கள் வளர்ப்பு தொழிலுக்கு 40 சதவீத மானியத்தில் விவசாயிகள், மீனவர்கள் பயன்பெறலாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.மீன்வளத்துறையில் மீன்கள் வளர்ப்பு தொழில் மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டங்கள் மூலம் விவசாயிகள், மீனவர்கள் பயன்பெறலாம் என்று வைகை அணை மீன்வளத்துறை உதவி இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: பிரதான் மந்திரி மத்திய சம்பதா யோஜனா திட்டத்தில் நுண்ணுயிரி மூலம் மீன் வளர்க்கும் திட்டத்திற்கு 10 சென்ட் இடம் போதுமானது. திட்டத்திற்கான மதிப்பீட்டு தொகை ரூ.7.50 லட்சம். ஒரு எக்டேர் பரப்பில் குளம் அமைத்து விரல் அளவில் உள்ள குஞ்சுகளை விட்டு மீன்களாக வளர்க்கும் திட்டத்திற்கு மதிப்பீடு தொகை ரூ.7 லட்சம்.ஒரு சென்ட் இடத்தில் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்கும் திட்டத்தில் மதிப்பீடு தொகை ரூ.10 லட்சம்.10 சென்ட் இடத்தில் கொல்லைப்புற வண்ண மீன் வளர்ப்பு திட்டத்தில் மதிப்பீடு தொகை ரூ.3 லட்சம் ஆகிய திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்களின் மதிப்பீடு தொகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெண்களுக்கு 60 சதவீதமும், பொதுப் பிரிவில் உள்ளவர்களுக்கு 40 சத வீதமும் மானியம் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், மீனவர்கள் வைகை அணை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்களுக்கு தேவையான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை