உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இ–சி.எஸ்.ஆர்., முறையில் 43 புகார்கள் பதிவு

இ–சி.எஸ்.ஆர்., முறையில் 43 புகார்கள் பதிவு

தேனி: மாநிலம் முழுவதும் ஆன்லைன் மூலம் போலீஸ் புகார் அளிக்கும் இ–சி.எஸ்.ஆர்., வசதியை டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால் நவ. 18 ல் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இ–சி.எஸ்.ஆர்., வசதி மூலம் இதுவரை 43 புகார்கள் வந்துள்ளது. இதில் தேனி சப்–டிவிஷனில் அதிகபட்சமாக 15 புகார்கள் வந்துள்ளன. போடி, உத்தமபாளையம் சப்–டிவிஷனில் தலா 10 புகார்களும், ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் தலா 4 புகார்களும் வந்தன. இவற்றில் சொத்து பிரச்னை, மிரட்டல் புகார்கள் அதிகம் என போலீசார் தெரிவித்தனர். புகார் அளிப்பவர்கள் உடனடியாக ஆன்லைனில் சி.எஸ்.ஆர்., நகல் எடுக்க இவ்வசதி உதவுவதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை