உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் தேர்வில் 5468 பேர் பங்கேற்பு

போலீஸ் தேர்வில் 5468 பேர் பங்கேற்பு

தேனி: மாவட்டத்தில் நடந்த இரண்டாம் நிலை போலீசாருக்கான தேர்வினை 5468 பேர் எழுதினர். 765 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை போலீசார், தீயணைப்பு வீரர்கள், சிறை காவலர்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. மாவட்டத்தில் தேனியில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்மவார் கலை அறிவியல் கல்லுாரி, மேரிமாதா மேல்நிலைப் பள்ளியில் ஆண் தேர்வர்களும், நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் பெண் தேர்வகள் என மொத்தம் 6233 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வில் 4606 ஆண்கள், 862 பெண்கள் என மொத்தம் 5468 பேர் தேர்வு எழுதினர். தேர்வு கண்காணிப்புப் பணியில் 600க்கும் மேற்பட்ட போலீசார், அமைச்சு பணியாளர்கள் ஈடுபட்டனர்.தேர்வு மையங்களில் ஐ.ஜி., ரூபேஸ்குமார்மீனா, எஸ்.பி., சினேஹாபிரியா ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி