6 கிலோ கஞ்சா: ஒருவர் கைது
கம்பம் : கம்பம் உலகத் தேவர் தெருவை சேர்ந்தவர் சந்திரன் 55. இவர் நேற்று மாலை கோம்பை ரோடு நாக கன்னியம்மன் கோயில் அருகில் பையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ. நாகராஜ், சந்திரனை நிறுத்தி அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் 6 கிலோ கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தார். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.