உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவிற்கு கடத்த பதுக்கிய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

கேரளாவிற்கு கடத்த பதுக்கிய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

தேனி: கேரளாவிற்கு கடத்திச் செல்ல தேனி அல்லிநகரத்தில் பதுக்கி இருந்த 6 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை கைப்பற்றி அல்லிநகரம் சக்திகுமாரை 33, போலீசார் கைது செய்தனர். கேரளாவிற்கு கடத்திச் செல்ல அல்லிநகரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. பறக்கும்படை தனித்துணை தாசில்தார் பரமசிவம் தலைமையில் ஆர்.ஐ.,க்கள் சுரேந்திரன், சதிஷ்குமார் அல்லிநகரத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வீரப்ப அய்யனார் மலைக்கோவில் செல்லும் ரோட்டில் மந்தைகுளம் கண்மாய் அருகே தனியார் இடத்தில் ஒரு தகரசெட்டில் 147 மூடைகளில் ரேஷன் அரிசியும், அருகே ஆட்டோவில் 13 மூடைகளில் ரேஷன் அரிசியும் இருந்தன. மூடைகளில் இருந்த 6.12 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அரிசியை தேனி நுகர்பொருள் வாணிப கழக கோடவுனில் ஒப்படைத்தனர். கடத்தலில் தொடர்புடைய அல்லிநகரம் சக்திகுமாரை போலீசார் கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி