மேலும் செய்திகள்
விலையில்லா தவணை வசதியை நாடுவது ஏற்றதா?
15-Sep-2025
தேனி:பி.எம்.கிஷான் நிதியுதவி திட்டத்தில் நில ஆவணங்களைப் பதிவு செய்யாத 6 ஆயிரம் விவசாயிகள் அக். 31க்குள் பதிவு செய்து 20 வது தவணைத் தொகையை பெற்று கொள்ள வேளாண் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பி.எம்.கிஷான் நிதியுதவி திட்டம் 2019ல் துவங்கப்பட்டது. இத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 28 ஆயிரம் பயனாளிகள் பயன் பெற்ற நிலையில் அதில் 6000 பேர் நில உடைமை விபரங்களை பதிவு செய்யாமல் உள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை 8 வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலங்களில் பதிவு செய்து தனித்துவமான தேசிய அடையாள எண் பெற வேண்டும். இன்னும் 6 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்ய வில்லை. அக்.31க்குள் பதிவு செய்து, அடையாள எண் பெற்றவர்களுக்கு தவணைத் தொகை செலுத்தப்படும் என்றனர்.
15-Sep-2025