கிரில் கேட், சைக்கிள், அலைபேசி திருடிய 7 பேர் கைது
போடி: போடி கொக்கையர்பள்ளி பின்புறம் வசிப்பவர் மாரிமுத்து 53. இவர் புதிதாக கிரீல் கேட் செய்து கேரளாவில் உள்ள தனது தோட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக வீட்டின் முன்பாக வைத்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு தூங்கி விட்டு காலையில் எழுந்து பார்த்த போது கேட் காணாமல் போனது தெரிந்தது. அருகே விசாரித்ததில் போடி மேலத் தெருவை சேர்ந்த சுதர்சன், சிலர் இரவு 2:00 மணி அளவில் வீட்டு முன்பாக இருந்தது தெரிய வந்தது.மாரிமுத்து புகாரில் போலீசார் சுதர்சனனை பிடித்து விசாரித்ததில் சுதர்சன் உட்பட 7 பேர் சேர்ந்து கிரில் கேட் திருடியது தெரிந்தது. இது போல போடி விஸ்வகர்மா மண்டபம் அருகே வசிக்கும் முத்துக்குமரேசன் 66. என்பவரிடம் அலைபேசி பறிப்பு, கருப்பணன் தெருவில் வசிக்கும் முகதர்ஷினி என்பவரின் வீட்டு முன்பாக இருந்த சைக்கிள் திருடியது விசாரணையில் தெரிந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய போடி மேலத்தெரு சுதர்சன் 20, பரமசிவன் கோயில் தெரு விக்னேஷ் 19, வஞ்சி ஓடை தெரு சேக்பரீத் 20. போடி ரங்கநாதபுரத்தை சேர்ந்த சுந்தரேசன் 20. மதுரை வண்டியூரை சேர்ந்த சிவலிங்கம் 19, சிவகங்கை சூரக்குளம் ரோட்டில் வசிப்பவர் பாலமுத்துமணி 19, எம் ஜி ஆர் நகரை சேர்ந்த விஷால் 19, ஆகிய 7 பேரை போடி டவுன் போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.