உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு

தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு

தேனி: தமிழகத்தில் ஆகஸ்டில் இருந்து 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தில் 36 ஆயிரத்து 105 பேர் பயனாளிகளாக இருந்தனர். இந் நிலையில் அரசு 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் வீடுகளில் பொருட்கள் வழங்க திட்டத்தை விரிவு படுத்தி உள்ளது. இதன்படி கூடுதலாக 8 ஆயிரத்து 558 பேருக்கு வீடுகளில் ரேஷன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் 44,663 பேர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி