உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 2 ஆண்டுகளில் 868 கஞ்சா வியாபாரிகள் கைது குண்டாசில் 82 பேர் சிறையில் அடைப்பு

2 ஆண்டுகளில் 868 கஞ்சா வியாபாரிகள் கைது குண்டாசில் 82 பேர் சிறையில் அடைப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு சிறப்பு நுண்ணறிவுப் போலீசார் மூலம் கடந்த2 ஆண்டுகளில் (2023, 2024ல்) 399 வழக்குகளில் 868 பேரை கைது செய்தனர். 82 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் 2023ல் 166 வழக்குகள் பதிவு செய்து 335 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1510 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். கடத்தலுக்கு பயன்படுத்திய69 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. கஞ்சா வியாபாரத்தில்தொடர்ச்சியாக ஈடுபட்ட 28 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில்கைது செய்தனர்.முந்தைய ஆண்டுகளிலும், ஆண்டிபட்டியிலும் கைப்பற்றிய 3680 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டது. கடந்தாண்டில் 2024ல் 233 வழக்குகளில் 533 பேர் கைது செய்து 528 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும், கடத்தலுக்கு பயன்படுத்திய 100 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 54 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை