உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கறிக்கடை முன் சடலம் வீச்சு; ஓசியில் கறி கிடைக்காத ஆத்திரத்தில் விபரீத செயல்!

கறிக்கடை முன் சடலம் வீச்சு; ஓசியில் கறி கிடைக்காத ஆத்திரத்தில் விபரீத செயல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: ஓசியில் கறி கிடைக்காத காரணத்தினால், சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண் சடலத்தை கறிக்கடை முன் வீசிச்சென்ற சம்பவம், தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் நடந்துள்ளது.தேனி மாவட்டம் தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் மணியரசன். இவரது கறிக்கடைக்கு சுடுகாட்டில் வேலை பார்க்கும் குமார் என்பவர் அடிக்கடி வந்து கறி வாங்கி சென்று வருவது வழக்கம் . அவருக்கு மணியரசன் இலவசமாக கறி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=702suzl3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று( பிப்.,09) காலை குமார் கடைக்கு வந்து மணியரசனை மிரட்டி இலவசமாக கறி கேட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் இலவசமாக கறி கொடுப்பதற்கு மணியரசன் மறுத்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார் சிறிது நேரம் கழித்து சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பெண் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீசார், சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் .சடலம் யாருடையது, எங்கிருந்து எடுத்துவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரை போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் கூடும் நேரத்தில் சடலத்தை கடை முன் வீசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

D.Ambujavalli
பிப் 10, 2025 06:30

வேங்கைவயல் கேஸ் ‘ சார் ‘ கேஸ், ஒரு ‘கார்’ என்று மர்ம மாநிலமாக மாறியுள்ள பொது, இனி எந்த வீட்டு வாசலில் பிணம் கிடைக்குமோ என்று பயந்துகொண்டே காலையில் கதவைத் திறக்கும் அவலமும் ஏற்படுமோ?


Matt P
பிப் 09, 2025 23:51

உங்கள் கருத்தை படித்தவுடன் எனக்கும் சந்தேகம் வந்து விட்டது. எந்த புற்றில் என்ன பாம்பு இருக்குமோ யாருக்கு தெரியும். வெளி நாட்டில் வாழும் நான் இந்தியா வந்தால் முட்டை மீன் தவிர்த்து வேறு எந்த அசைவ உணவும் உண்ண கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்ட்டேன். அரசு சார்ந்த சுகாதார துறை இன்னும் பொறுப்புணர்வோடு செயலாற்றினால் தான் விடியல் பிறக்கும்.


thangam
பிப் 09, 2025 18:50

சுடுகாட்டில் வேலை பார்க்கும் அவருக்கு கறிக்கடைக்காரர் எதற்காக இலவச கறி இது நாள் வரை கொடுக்க வேண்டும்.. எங்கோ இடிக்கிறது.


ramesh
பிப் 09, 2025 18:00

இங்கே கருத்து எழுதுபவர்கள் நாட்டில் எது நடந்தாலும் உடனே திராவிட ஆட்சி என்று ..... இல்லாமல் கருத்து போடுகிறார்கள் ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்பில் .


Matt P
பிப் 09, 2025 23:53

கட்சி சார்ந்தவர்கள் அப்படி தான் எழுதுவார்கள். நீங்களும் கட்சி சார்ந்தவர் என்பதால் எதிர் கருத்து எழுதுங்கள்.


எஸ் எஸ்
பிப் 09, 2025 17:51

என்னென்னவோ நடக்குது நாட்டில். இன்னும் என்னென்ன பார்க்க போகிறோமோ?


ராஜ்
பிப் 09, 2025 16:23

எல்லாம் திராவிட மாடல்


அப்பாவி
பிப் 09, 2025 15:12

பிதாமகன் 2 படம் எடுக்கலாம் போலிருக்கே.


அன்பே சிவம்
பிப் 09, 2025 14:29

1). அந்த நபரை மக்கள் அதே இடத்தில் கை கால் உடைத்து இருக்க வேண்டும். 2). இதுதான் இன்றைய யதார்த்த நிலை தமிழகத்தில். 3). கிருப்ட்டோ கிருஸ்டைன் இருந்து கொண்டு படிக்காமல் இடஒதுக்கீடு மூலம் ஹிந்து தாழ்த்தப்பட்டோரின் வேலை வாய்ப்புகளை பிடுங்கி கொள்ளுவது. 4). கஷ்டப்பட்டு ஒருவர் சம்பாதித்து வாழ்ந்ததால் அவரிடம் வேலை செய்யாமல் இந்த மாதிரி கொள்ளை அடிக்கும் கும்பல், அவர்களுக்கு சட்டம் ஓரு பாதுகாப்பு கவசம்.


ஆரூர் ரங்
பிப் 09, 2025 14:22

ஓசிச்சோறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. திராவிஷ மண்ணு.


Haja Kuthubdeen
பிப் 09, 2025 17:00

நல்ல வேலை இதில் மூர்க்கங்க இல்லை..


Haja Kuthubdeen
பிப் 09, 2025 17:02

ஓசிச்சோறு இல்ல ஓஸி கறி..


Vel1954 Palani
பிப் 09, 2025 13:50

அவர் அந்த செயலை செய்யும் அளவுக்கு கறி கடைக்காரர் என்ன பேசினார் என்பதையும் அறிய வேண்டும். பாவம்.


Haja Kuthubdeen
பிப் 09, 2025 14:25

இவ்வளவு நல்லவரா நீங்க இருக்கக்கூடாது...ஓஸியில் தினம் வாங்கி தின்றவனுக்கு ஒருநாள் இல்லையென்றதும் எவ்ளோ கோபம்..


சமீபத்திய செய்தி