உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன்கடை

தேனியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன்கடை

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி 3வது வார்டில் பொம்மையகவுண்டன்பட்டி தெற்கு புதுத்தெரு உள்ளது. இங்கு தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடை செயல்படுகிறது. இந்த ரேஷன்கடை கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் மேற்கூறை சிமென்ட் பூச்சு உதிர்ந்து கீழே விழுந்தது. இதனால் இக்கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டடம் இடிந்து பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் முன் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை