உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி மெட்டில் பயணிகளை தழுவிச் செல்லும் பனிமூட்டம்

போடி மெட்டில் பயணிகளை தழுவிச் செல்லும் பனிமூட்டம்

போடி:தமிழகம், கேரளா வை இணைக்கும் போடிமெட்டு மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை தழுவிச் செல்லும் வகையில் மழையுடன் பனி மூட்டம் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தமிழக, கேரளாவை இணைக்கும் மூணாறு செல்லும் வழித்தடத்தில் தேனி மாவட்டம், போடிமெட்டு உள்ளது. இங்கு பரந்து விரிந்த பசுமை பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4644 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் புலியூத்து பகுதியில் நீர் அருவியாய் கொட்டுகிறது. இதனை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் போடிமெட்டு மலை உச்சியில் நின்று பனிமூட்டம், இயற்கையை ரசித்து செல்கின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் சாரல் மழையுடன் பனி மூட்டத்தால் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு குளிர் சீதோஷ்ண நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ