உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுழற்சி முறை சாகுபடிக்கு வேண்டுகோள்

சுழற்சி முறை சாகுபடிக்கு வேண்டுகோள்

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நெல் சாகுபடி செய்வதை தவிர்த்து சுழற்சி முறையில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என வேளாண் துறை வலியுறுத்த துவங்கியுள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இரு போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. லோயர்கேம்பில் ஆரம்பித்து பழனிசெட்டிபட்டி வரை சாகுபடி நடைபெறுகிறது.சமீப காலங்களில் நெற்பயிரில் நோய் தாக்குதல், மகசூல் குறைவு ஏற்படுகிறது. இந்தாண்டு நல்ல மகசூல் என்றாலும் கடந்த சில ஆண்டுகள் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர்.எனவே தொடர்ந்து நெல் சாகுபடியை மட்டும் செய்யாமல் சுழற்சி முறையில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய வேளாண் துறை வலியுறுத்துகிறது. ஆனால் மாற்றுப் பயிர் சாகுபடியை ஒரு சிலர் மட்டும் செய்தால் போதாது. ஒரே சமயத்தில் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மண்ணின் வளம் காக்கப்படும். தொடர்ந்து நெல் சாகுபடி செய்யப்படுவதால் குறிப்பிட்ட சத்துக்கள் இல்லாமல் போய்விடும். விளைச்சல் தன்மை குறையும். எனவே மாற்று பயிருக்கு விவசாயிகள் முன்வர வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை