உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களின் திறனை உறுதி செய்ய 50 பேர் குழு நியமனம் ஆறு மாத சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு

மாணவர்களின் திறனை உறுதி செய்ய 50 பேர் குழு நியமனம் ஆறு மாத சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு

தேனி: மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, அடிப்படை கணித திறனை ஆய்வு செய்து உறுதி செய்ய 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுத்து திறன், அடிப்படை கணிதம் அதாவது வாய்ப்பாடு, எளிய கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் திறன் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக வட்டாரம், மாவட்ட அளவில் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் தலைமையில் 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆலோசனைக்கூட்டம் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி டி.இ.ஓ., சுருளிவேல் தலைமையில் நடந்தது. சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் சீனிவாசன், பெருமாள்சாமி முன்னிலை வகித்தனர். இந்த குழுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுத்து, கணித திறன் ஆய்வு செய்ய பள்ளிகளில் தேர்வு நடந்து வருகிறது. அதில் பின்தங்கிய மாணவர்களை ஒருங்கிணைக்க உள்ளோம். அவர்களுக்கு 6 மாதங்களுக்கு வாசிப்பு, எழுதுதல், அடிப்படை கணிதம் தொடர்பான பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி