மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
8 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
11 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
11 hour(s) ago
மூணாறு: மூணாறு அருகே ஒரு மாத இடைவெளியில் இருவரை கொன்ற காட்டு யானையை அடையாளம் காண இயலாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.மூணாறு அருகே கே. டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கோவை தொப்பனூர் எம்.ஆர். புரத்தைச் சேர்ந்த பால்ராஜ் 79, ஜன.23ல், கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் தொழிலாளி சுரேஷ்குமார் பிப்.26ல் காட்டு யானை தாக்கி இறந்தனர்.மூணாறு பகுதியில் வயது முதிர்ந்த பிரபல படையப்பா ஆண் காட்டு யானை உள்ளது. இந்த யானையின் தந்தங்கள் நீளமாக காணப்படும். அது போன்று நீளமான தந்தங்களை கொண்டதும், தலை சற்று பெரிதான காட்டு யானை இருவரையும் கொன்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த யானையை வனக்காவலர்கள் கடந்த ஒரு வாரமாக தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. அதே சாயலில் படையப்பா மட்டும் நடமாடுவதை வனக்காவலர்கள் கண்டதால் இருவரையும் படையப்பா கொன்றிருக்கலாம் என வனக்காவலர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தபோதும் இருவரையும் கொன்றது படையப்பா என்பதை உறுதிபடுத்தவில்லை. அதனால் இருவரை பலி வாங்கிய யானையை அடையாளம் காணுவதில் குழப்பம் ஏற்பட்டு வனத்துறையினர் திணறி வருகின்றனர்.கண்காணிப்பு: மதம் பிடித்த அறிகுறியுடன் கடந்த பத்து நாட்களாக வலம் வரும் படையப்பா லாரி, பஸ், கார், ஜீப் உள்பட ஏழு வாகனங்களை சேதப்படுத்தியது. அதனை வனக்காவலர்கள், யானை தடுப்பு பிரிவினர் ஆகியோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று கல்லார் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தினுள் படையப்பா நடமாடியது.
8 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago