உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம்

இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம்

கூடலுார் : கூடலுாரில் தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் இன்றும் (ஏப். 23) நாளையும் நடைபெறுகிறது.தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தனது அறிக்கையில் கூறுகையில்,' கூடலுார் இந்து நடுநிலைப் பள்ளியில் ஏப். 23, 24 ( இன்று, நாளை)ஆகிய இரண்டு நாட்கள் தபால் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் காலை 9:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது. இதில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி திருத்தம், அலைபேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவு, குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் பதிவு ஆகியவை செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை