உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆதிசிவன் ரியல் எஸ்டேட் நிறுவன இல்ல திருமண விழா

ஆதிசிவன் ரியல் எஸ்டேட் நிறுவன இல்ல திருமண விழா

தேனி: தேனி அன்னஞ்சி ஆதிசிவன் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குநர் மோகன்குமார் இல்லத் திருமண விழா தேனி மதுராபுரி ரோட்டில் உள்ள மஹாலில் நடந்தது. மணமகளின் தந்தை ராஜசேகர், தாயார் அன்னமுத்து, மணமகனின் தந்தை மோகன்குமார், தாயார் பிரபா ஆகியோர் அனைவரையும் வரவேற்று,மணமக்களை ஆசீர்வதித்து திருமணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமர், ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ், ராஜகுரு, எம்.பி., தங்கதமிழ்செல்வன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார், தி.மு.க., போடி ஒன்றியச் செயலாளர் அய்யப்பன், போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன், தொழிலதிபர்கள் பழனிதாஸ், முத்துகோவிந்தன், தேனி பிளைவுட்ஸ் இயக்குநர் ராஜசேகர், பாண்டியராஜன் சன்னாசி, ஆதித்யா ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் லோகநாதன், தனலட்சுமி மஹால் இயக்குனர் சி்ன்னன், தேவா, தருண் வழக்கறிஞர் ரமேஷ், ஜெகஜோதிரியல் எஸ்டேட் இயக்குனர் வெற்றிவேல், ஆதித்யா ரியல் எஸ்டேட் மகேந்திரன், தர்மர், அக்ஷயஜோதி கன்ஸ்ட்ரக்சன் ஜெயக்குமார், ஜானகி முத்தையா மஹால்இயக்குனர் சக்தி, வயல்பட்டி ரியல் எஸ்டேட் இயக்குனர் மணிகண்டன், லயன்ஸ் கிளப் இயக்குனர் மாணிக்கம், ஹாலோபிளக்ஸ் இயக்குனர் விஜயராஜன் ஆகியோர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமண ஏற்பாடுகளை இண்டியன் ஆர்மி ஆபீஷர் டார்வின் விக்னேஷ் பிரியதர்ஷினி, சிவசக்தி குரூப்ஸ்ஆதிசிவன் ரியல் எஸ்டேட், எஸ்.எஸ். பர்னிச்சர், ஏ.எப்.சி., பிட்னஸ் சென்டர் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை