தமிழ் பெயர் பலகை இல்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தொழிலாளர் நல உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.