அணைகளில் மின் உற்பத்தி ஆய்வு செய்ய நடவடிக்கை
கம்பம்,: தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் வாய்ப்புக்கள் குறித்து ஆய்வு நடத்த நடவடிக்கைகள் துவங்க உள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை எடுத்து 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரவங்கலாறு அணையிலிருந்து தண்ணீரை எடுத்து ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர முல்லைப்பெரியாற்றில் குருவனூத்து பாலம், குள்ளப்பகவுண்டன்பட்டி, வைகை அணை போன்ற இடங்களில் மைக்ரோ மின் நிலையங்கள் மூலம் குறைந்த மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.தற்போது இந்த இடங்களை தவிர்த்து சண்முகா நதி அணை 52.5 அடி , மஞ்சளாறு அணை 57 அடி , - சோத்துப்பாறை அணை 126 அடி கொள்ளளவு கொண்டது. இந்த 3 அணைப்பகுதிகளிலும் மின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி மின்வாரியம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. வைகை அணையில் உள்ளதை போன்று அமைக்கலாமா அல்லது கூடுதல் மெகாவாட் மின் உற்பத்திக்கு சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதைப் பற்றிய மின்வாரியம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.