ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விவகார குழு ஆய்வு
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் லோக்சபா ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விவகார குழு ஆய்வு நடத்தினர்.ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு பொதுத்துறையில் பிரதிநிதித்துவம், வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு பிரச்னைகளை குறித்து பக்கன்சிங்குலாஸ்தே எம்.பி., தலைமையில் 20 எம்.பி.க்கள் கொண்ட லோக்சபா விவகார குழு மாநிலம் வாரியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அக்குழு இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தினர்.மூணாறு அருகே பைசன்வாலி ஊராட்சிக்குச் சென்ற அக்குழு பழங்குடியினர் வசிக்கும் கோமாளிகுடியில் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் மேம்பாட்டு துறை இயக்குனர் ரேணுராஜ் உள்பட அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.அப்போது ஜாதி சான்றிதழ், பட்டா, வன உரிமை, வேலைவாய்ப்பு உறுதி ஆகியவற்றில் தலையிட்டு சுமூக தீர்வு காணப்படும் எனவும் சி.எஸ்.ஆர். நிதியை பெற முடிந்தவரை முயற்சி மேற்கொள்ளப்படும் என குழு தலைவர் பக்கன்சிங்குலாஸ்தே உறுதி அளித்தார்.