| ADDED : டிச 26, 2025 05:36 AM
தேனி: 'மிளகாய் பயிரில் பூச்சி, இலைப்பேன் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்.' என, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நிர்மலா விளக்கி உள்ளார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் சுமார் 375 எக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மிளகாய் பயிரில் இலைப்பேன், பூச்சித் தாக்கி இருந்தால் இலைகளில் சுருக்கம் ஏற்பட்டு, மேல்நோக்கிச் சுருளும். இதனால் செடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் பாதிக்கப்படலாம். இதனை தடுக்க ஊடுபயிராக அகத்தி, வெங்காயம் சாகுபடி செய்யலாம். சோளம் பயிரிட்ட நிலத்தில் உடனடியாக மிளகாய் சாகுபடி செய்யக் கூடாது.தாக்குதல் அதிகரித்து காணப்பட்டால் 10 லி., தண்ணீரில் இமிடாக்குளோபிரைடு 3 மி.லி., அல்லது தையாக்குலோபிரைடு 2 மி.லி., கலந்து தெளிக்கலாம். இதன் மூலம் பூச்சி தாக்குதலில் இருந்து மிளகாய் பயிரை பாதுகாக்கலாம்., என்றார்.