உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

மா மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

தேனி : மாவட்டத்தில் 8900 எக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பெரியகுளம், போடி, தேனி, கம்பம் பகுதிகளில் கூடுதல் பரப்பில் பயிரிடப்படுகிறது. மா சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான ஆலோசனைகளை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நிர்மலா கூறியதாவது: மா மரங்களில் காயந்த, தேவையற்ற கிளைகளை சூரிய ஒளி, காற்று கிடைக்கும் வகையில் அகற்ற வேண்டும். நவம்பர்- டிசம்பரில் ஒரு மரத்திற்கு தலா ஒரு கிலோ யூரியா, பொட்டாஷ், அரைகிலோ பாஸ்பரஸ் உரங்களை மரத்தினை சுற்றி இட வேண்டும். இதனை தொடர்ந்து டிசம்பரில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இமிடாகுளோபிரைடு 0.1 மி.லி, சல்பர் 2கிராம், ஒட்டுப்பசை கலந்து தெளிப்பதன் மூலம் பூ பூக்கும் திறனை அதிகப்படுத்தலாம். பிப்.,ல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் யூரியா கலந்து தெளிப்பதன் மூலம் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ