மேலும் செய்திகள்
தென்னை டானிக் செயல்விளக்கம்
27-Feb-2025
பெரியகுளம்; பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பாடுகள் மற்றும் விரிவாக்க திட்டங்களை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பார்வையிட்டார். இயற்கை வேளாண்மை மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், முருங்கை, தோட்டக்கலை பயிர்களின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார். கல்லூரியின் வெளியீடான சப்போட்டா, எலுமிச்சை, வில்வம், விளாம்பழம், சிவப்புப் புளி, கொடுக்காப்புளி, மேற்கு இந்தியன் செர்ரி மற்றும் முருங்கை உட்பட காய்கறிகள் ரகம் மாதிரி திடல்களை பார்வையிட்டு, இடுபொருட்கள் வழங்கினார். கல்லூரி முதல்வர் ராஜாங்கம், தொழில் முனைவோர் முதன்மை நிர்வாக அலுவலர் வசந்தன், தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, பேராசிரியர்கள் முத்தையா, முத்துராமலிங்கம், அனிதா, சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Feb-2025