உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடை உழவு அவசியம் வேளாண் துறை வலியுறுத்தல்

கோடை உழவு அவசியம் வேளாண் துறை வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: கோடை உழவு செய்து விவசாய நிலங்களை பண்படுத்துவதால் அடுத்த முறை மகசூல் அதிகமாகும் என்று வேளாண்மை துறை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போது ஆண்டிபட்டி பகுதியில் மானாவாரி, இறவை பாசன நிலங்களில் அறுவடை நடந்து வருகிறது. அறுவடைக்குப்பின் நிலங்களை அப்படியே விட்டு விடாமல் கோடை உழவு செய்ய வேண்டும். கோடை உழவால் மழைநீர் நிலத்தில் தங்கும். நிலத்தில் இருந்து வெளிவரும் கூட்டுப் புழுக்கள் பறவைகளால் அழிக்கப்படும். இதனால் பூச்சி தாக்குதல் குறையும். இயற்கை சத்து நிலத்தில் அதிகமாகும். அடுத்த முறை சாகுபடிக்கு நிலம் பக்குவப்படுத்தப்படும். இதனால் கோடை உழவு நிலத்திற்கு அவசியம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி