உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மீண்டும் டிஜிட்டல் கிராப் சர்வே செய்ய அறிவுறுத்தல் வேளாண் துறையினர் திகைப்பு

மீண்டும் டிஜிட்டல் கிராப் சர்வே செய்ய அறிவுறுத்தல் வேளாண் துறையினர் திகைப்பு

தேனி: தமிழகத்தில் மீண்டும் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேளாண் துறையினர் திகைப்பிற்கு ஆளாகி உள்ளனர்.தமிழகத்தில் கடந்தாண்டு வி.ஏ.ஓ.,க்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இச் சர்வே பணியில் விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் தொடர்பான விபரங்கள் ஆன்லைன் செயலியில் பதிவேற்ற கூறப்பட்டது.பணிச்சுமை, உரிய உபகரணங்கள் வழங்கவில்லை என கூறி இப்பணிக்கு வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேளாண், தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் மூலம் வேளாண் துறையினர் இப்பணியை செய்தனர்.இந்நிலையில் மீண்டும் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை மேற்கொள்ளுமாறு வேளாண் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை சர்வே பணி மேற்கொண்ட போது கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடக்கவில்லை. இதனால் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்றனர். பணியும் விரைவாக முடிந்தது. ஆனால், தற்போது கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடக்கிறது. துறையிலும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. சர்வே பணியை இருமாதங்களுக்கு பிறகு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை