உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க., கோஷ்டி பூசல் போஸ்டர் கிழிப்பு

அ.தி.மு.க., கோஷ்டி பூசல் போஸ்டர் கிழிப்பு

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசலால் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில் ஒரு தரப்பினர் ஒட்டிய போஸ்டரை மற்றொரு தரப்பினர் கிழித்து எறிந்தனர்.எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டியில் பேரூராட்சி 4 வார்டு கவுன்சிலர் மலர்விழி அவரது கணவர் பொன்முருகன் சார்பில் போஸ்டர் அடித்து ஆண்டிபட்டி நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது. போஸ்டரில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர் ராமர் படங்கள் மட்டும் இருந்தது. அ.தி.மு.க., ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் படங்கள் இடம் பெறவில்லை.இதனால் ஒன்றிய செயலாளர் ஆதரவாளர்கள் அந்த போஸ்டரை கிழித்து எறிந்தனர். இது குறித்து மாவட்ட செயலாளர் முன்னிலையில் ஒருவரைஒருவர் புகார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ