உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகள், வணிகர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வாக்குறுதி

விவசாயிகள், வணிகர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வாக்குறுதி

தேனி: தேனியில் விவசாயிகள், வணிகர் சங்க நிர்வாகிகளை தனித்தனியாக சந்திந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார். பழனிச்செட்டிபட்டி ஓட்டலில் தங்கியிருந்த பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அதன் விபரம்: பனைமுருகன், சிலமலை: 18ம் கால்வாய் அக்டோபர் மாதம் திறக்கப்படுவதை, செப்டம்பர் மாதம் திறக்க வேண்டும். அதிக மழை காலங்களில் முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் நீர் இருப்பு உள்ள காலங்களில் நீரைதிறந்து பாசன வசதி பெற அரசாணை வெளியிட வேண்டும். சின்னச்சாமி, தமிழக மலர் அனைத்து விவசாயிகள் சங்கம்: ஆண்டிபட்டி தாலுகாவில் வறட்சியால் நிலத்தடிநீர்மட்டம் 1500 அடிக்கு கீழ் சென்று விட்டது. 6500 விவசாய கிணறுகளில் நீர் இல்லை. இதனால் மக்கள் வேலை தேடி வெளியூர் செல்கின்றனர். பாசன தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் கொண்டு வர வேண்டும். சீனிராஜ், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்: க.மயிலாடும்பாறை ஒன்றியம், கிழவன்கோயில் காமராஜபுரம் முதல் விருதுநகர், கூமாபட்டி ரோடு வனத்துறை நடவடிக்கையில் நிலுவையில் உள்ளது. இத்திட்டம் நிறைவேற்ற வேண்டும். செல்வக்குமார், மாவட்டத் தலைவர், வணிகர்கள் சங்க கூட்டமைப்பு, நிர்வாகிகள்: தொழில் வரிக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு6 மாதங்களுக்கு ரூ.21 ஆயிரம் என 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி வருமான வரம்பை ரூ.1 லட்சம் என உயர்த்தி அறிவித்து,சிறு, குறு வணிகர்களை தொழில்வரி செலுத்துவதில் இருந்து பாதுகாக்க வேண்டும். சுகுணா, அய்யப்பன்: தபால்துறை சிறுசேமிப்பு முகவர்கள் மகளிர் சங்கம்: தமிழகத்தில் 50 ஆயிரம் மகளிர் தபால்துறை சிறு சேமிப்பு திட்ட முகவர்கள்உள்ளனர். எங்கள் சேவைக்காக மத்திய அரசு 4 சதவீத கமிஷனும், தமிழக அரசு 2 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கி வந்தது. சியாமளா கோபிநாத் அறிக்கைகாரணமாக 2012 முதல் 13 ஆண்டுகளாக மாநில அரசின் 2 சதவீத கமிஷன் நிறுத்தப்பட்டு விட்டது. மீண்டும் 2 சதவீத ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். மனுக்களை பெற்று அனைத்து கோரிக்கைகளும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என பொதுச்செயலாளர் பழனிசாமி உறுதியளித்தார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி