உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை வட்டார வள மையத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.அங்கன்வாடி திட்டத்தை பாதுகாக்கவும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்திடவும் வலியுறுத்தி கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வட்டார அளவில் நடந்த போராட்டத்தில் வட்டக்கிளை தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை பாதுகாக்கவும், அனைத்து குழந்தைகளுக்கும் சீரான முன் பருவக் கல்வி அளித்திடவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் வலியுறுத்தியும் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி