உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அங்கன்வாடி ஊழியர்கள் 2 வது நாளாக காத்திருப்பு

அங்கன்வாடி ஊழியர்கள் 2 வது நாளாக காத்திருப்பு

தேனி : தேனியில் அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோடை கால விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாநில நிர்வாகி நாகலட்சுமி, நிர்வாகி சாந்தியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெரும்பாலான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டத்தில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் செயல்படவில்லை. குழந்தைகளை மையங்களுக்கு அழைத்து சென்ற பெற்றோர்கள் திருப்பி அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை