தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது
தேனி: போடி கூலித்தொழிலாளி ரமேஷ் கொலை வழக்கில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், தேனி பாரஸ்ட்ரோடு சண்முகசுந்தரம்38, என்பவரை பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். போடி குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெரு ரமேஷ், 2018ல் காணாமல் போனார். இவரது மனைவி மேகலா புகாரில் போடி நகர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் 2018 ல் வீரபாண்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டு வீரபாண்டி போலீசார் விசாரித்து வந்தனர். ரமேஷ் மாயமான வழக்கில் போடி பாண்டிக்கு தொடர்பு இருப்பதை அறிந்து போலீசார் விசாரித்தனர். சொத்து தகராறில் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது. கிணற்றில் மீட்கப்ட்ட உடல் ரமேஷ் என உறுதியானது. இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான தனிப்படையினர் இவ்வழக்கில் தொடர்புடைய கூடலுார் வழக்கறிஞர் செந்தில்குமார், போடி பாண்டி , பழனிசெட்டிபட்டி ராமநாதன் ஆகியோரை நவம்பரில் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய தேனி பாரஸ்ட்ரோடு 11வது தெரு சண்முகசுந்தரத்தை 37, கைது செய்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.