உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தபால்துறை சேவை நிறுவனங்கள்  துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தபால்துறை சேவை நிறுவனங்கள்  துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தேனி,: 'தேனி கோட்ட தபால்துறை சார்பில் தபால்தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், மணியார்டர் ஆகியவற்றை பதிவு செய்தல், இதர சிறு வகை சேவைகள் பொது மக்களுக்கு வழங்கும், உரிமம் பெற்ற சேவை நிறுவனங்களை (Franchisee Outlets) துவங்க விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,' என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேனி கோட்டத்தில் தபால்துறை சேவைகளை விரிவுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட முகமை திட்டத்தின் கீழ் சேவை வழங்கும் மையங்களை துவங்க விரும்பும், தகுதி வாய்ந்த நபர்கள், நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த, விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தபால்துறை அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதல்கள், தகுதி விபரங்கள், விண்ணப்பப் படிவங்கள், தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், https://utilities.cept.gov.in/DOP/Viewuploads.aspx?uid=10 என்ற இணைய முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம்செய்து, பயன் பெறலாம். விண்ணப்பங்களை சமர்பிக்க இறுதி நாள் ஜூலை 31 ஆகும். கூடுதல் விபரங்களுக்கு கோட்ட கண்காணிப்பாளர் தேனி அலுவலகத்தை 04546- - 254843 என்ற எண்ணிலும், dotheni.indiapost.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !